Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

August 4, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

August 4, 2026

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சுகாதாரம் பற்றிய செயல் அமர்வு.
இலங்கை

சுகாதாரம் பற்றிய செயல் அமர்வு.

ThanaBy ThanaAugust 14, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.14.08.2023.

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அனுசரனையுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பெருந்தோட்டத்துறையினருக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது 200 வருடங்கள் ஆகியும் மலையக பெருந்தோட்டத்துறையினரின் பாதுகாப்பும், சுகாதாரமும் இன்னும் ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்படுவதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் சுகாதார விடய உரிமைகளையும், தொழில்சார் உரிமைகளையும் மீட்டெடுக்க பல திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்திய அமைச்சர், பெருந்தோட்டதுறையில் பெண் தொழிலாளர்கள் அதிகாமாக தொழிலில் ஈடுப்படுவதாகவும், இவர்களுக்கு தொழில் புரியும் தேயிலை மலைகளில் கழிவரை வசதி, உணவு உண்ணுவதற்கான வசதி வேலை நேரங்களில் நோய்கள் ஏற்பட்டால் அவர்கள் ஓய்வு எடுப்பதற்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத துர்ப்பாகிய நிலையிலே தொழிலாளர்கள் தேயிலை தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தோட்ட நிர்வாகம் அன்று தொட்டு இன்று வரை தொழிலாளர்களுக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்ற தவறி வருகின்றமையையும், இவ்விடயங்கள் தொடர்பாக அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும் தெளிவுப்படுத்தினார்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காப்பாளர்களான சிவராஜா, ஜெகதீஸ்வரன், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், திருமதி.அனுஷியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், பிரதி தவிசாளர் சட்டதரணி இராஜதுரை, பிரதி பொது செயலாளர் செல்லமுத்து, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, சிரேஸ்ட சட்டத்தரணி மாரிமுத்து, தொழிற்சங்க பிரிவின் சிரேஸ்ட பணிப்பாளர் ராஜமணி, உப தலைவர்கள், தொழிற்சங்க பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள், மாவட்ட தலைவர்கள், தலைவிகள், அமைப்பாளர்கள், சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் ஆநோப் ஷட்பதி மற்றும் தொழில் திணைக்களத்தின் மேலதிக பொது தொழில் ஆணையாளர் அபேயசிரிவர்த்தன, முதலாளிமார் சம்மேளனத்தின் சிரேஸ்ட உதவி பொது இயக்குனர் பிரசாத் .டி. சில்வா, பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவின் பொறுப்பாளர் டாக்டர். சரத் அமுனுகம, உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026
    Editors Picks

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.