மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதை கண்ட மக்கள் பீதியில் உள்ளனர்.
இது குறித்து அப் பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில் நாளாந்தம் காலை வேளைக்கு செல்லும் போது குரித்த புலி வீதியை கடந்து செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது எனவும் , கடந்த சில மாதங்களாக மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் நாய் மற்றும் வளர்ப்பு ஆடுகள் காணாமல் போய் உள்ளது எனவும் தற்போது இந்த புலிதான் வேட்டையாடி உள்ளது தெரிய வந்தது உள்ளது. இது குறித்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உயர் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது .
15.08.2023.
லிந்துலை நிருபர் கௌசல்யா
