(முஹம்மட் றசீன்)
2023 ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஏறாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய ஏறாவூர் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான2023 ஜூன் மாதத்திற்கான “அறிவுக் களஞ்சியம்” வினா விடைப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை(15) காலை 9.30 மணிக்கு அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் M.H.M ஹமீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இப் போட்டியில் அறபா வித்தியாலயம், அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயம், அலிகார் தேசிய பாடசாலை, குடியிருப்பு கலைமகள் வித்தியாலம், றஹ்மானியா மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.
இறுதிப் போட்டிக்கு அலிகார் தேசிய பாடசாலை, றஹ்மானியா மகா வித்தியாலயம் ஆகியன தெரிவு செய்யப்பட்டன. இறுதியில் றஹ்மானியா மகா வித்தியாலம் வெற்றி பெற்று “Genius school of the month – June 2023” விருதை தனதாக்கிக் கொண்டதோடு, ஒரு மாதத்திற்கு தேசிய செய்திப் பத்திரிகையொன்றினை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டது.

அத்தோடு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வருகைதந்த அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் ஜனாப் எஸ்.எம்.எம் அமீர் அவர்களும், கௌரவ அதிதிகளாக Batticaloa lions club Zone chair person ஜனாப் றுஸ்வின், ஏறாவூர் லயன்ஸ் கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ ஆசிக், மற்றும் அங்கத்தவர்கள், நஜிமில் உலூம் சனசமூக நிலையத்தின் தலைவர் ஜனாப் கே. அப்துல் வாஜித், பொருளாளர் ஜனாப் யூ.எல். நூர் முஹம்மட், மற்றும் விசேட அதிதிகளாக பாடசாலைகளின் அதிபர்களும், ஏறாவூர் நகரசபை நிருவாக உத்தியோகத்தர் திருமதி நபீறா றசீன், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் ஏறாவூர் நகரசபை நூலகத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இவ்வினா விடை போட்டியின் பிரதான நடுவராக ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் நஸீர் அவர்கள் கடமை புரிந்தார்.
இப்போட்டிக்கான நிதி உதவிகளை ஏறாவூர் லயன்ஸ் கழகம் மற்றும் நஜிமில் உலூம் சனசமூக நிலையம் ஆகியன வழங்கியிருந்தன. இந்நிகழ்ச்சியினை வொயிஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் ஆலோசகர் ஏறாவூரின் சிரேஷ்ட அறிவிப்பாளர் எம்.ஐ.எம். றம்ஸி மற்றும் அறிவிப்பாளர் றபீக் ஜலீல் ஆகியோர் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



