பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட 140 ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது நியமனம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் குறித்து ஆசிரியர்கள் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்ற நிலையில் மத்திய மாகாண ஆளுநர் கமகே உடனான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
அந்தவகையில், குறித்த ஆசிரியர் குழாமினர் நேற்று மத்திய மாகாண ஆளுநரை சந்தித்து இது தொடர்பில் வினவியபோது போது,
குறித்த ஆசிரியர் நியமனங்களுக்காக நிதி ஒதுக்கீடு ஏதேனும் செய்யப்படவில்லையென்று, நியமனம் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்படும் என குறிப்பிட்டதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
உதவி ஆசியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராமேஸ்வரன் எம்.பி குறிப்பிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது .
