இலங்கையில் உள்ள மாணவர்கள் ஹிந்தி மற்றும் சீன மொழிகளை கற்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரித்துள்ளார்.
இலங்கையின் பாடசாலைக் கல்வியானது எதிர்கால போட்டி நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.
எதிர்கால தேவைப்பாடுகள் கருதி மாணவர்கள் ஆங்கிலத்துக்கு மேலதிகமாக ஹிந்தி மற்றும் சீன மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவர்களின் பாடத்திட்டங்களில் இந்த மொழிகளையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
