மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.21.08.2023.
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் இன்று காசல்ரீ நீர் தேக்கம் அமைந்துள்ள பகுதியில் பல இடங்களில் விசமிகள் தீ வைத்து உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள மாணா பற்றைகள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.
இதனால் வன ஜீவராசிகள் பல அழிந்து போய்யுள்ளது.
மேலும் காசல்ரீ நீர் தேக்கம் பகுதியில் உள்ள பயிற்சி நிலையம் அருகில் இன்று மாலை 4 மணி அளவில் விசமிகள் தீ வைத்ததால் 2 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியது.
அதனைத் தொடர்ந்து நீர் மின் நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் இனைந்து தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்க முடிந்தது.

