இங்கிரிய, றைகம், கீழ்பிரிவு, விபுலானந்தா தமிழ் பாடசாலையில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூடும் விழா (ஆகஸ்ட் -17) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விபுலானந்தா தமிழ் பாடசாலையின் அதிபர் மெய்யன் ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஹொரண வலயக் கல்வி அதிகாரிகள், மற்றும் ஹொரண வலயத்தில் அமையப்பெற்றுள்ள தமிழ், சிங்கள பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், இங்கிரிய பொலிஸ் நிலைய உயர் அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

பாடசாலை பேண்ட் வாத்திய குழுவினர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதுடன், பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடத்துடன் விழா ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் மாணவர்களின் தலைமைத்துவம் பற்றிய சிறப்புரையை மலையகம்.LK வலைத்தளத்தின் நிறுவுனர் தனா வழங்கினார்.
நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
மணி ஸ்ரீகாந்த்










