பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தல்தென்ன 6 ம் கட்டை பகுதியில் கால்வாய் ஒன்றுக்கு அருகாமையில் வீழ்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று 4.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் பதுளை தல்தென்ன அம்பகஸ்தோவ பகுதியில் வசிக்கும் 70 வயதுடைய நபர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
பதுளை பிராந்திய பொறுப்பதிகாரி சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் பேரில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
