Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

August 6, 2026

சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

August 6, 2026

கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டனில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை
மலையகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டனில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

ThanaBy ThanaAugust 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஹட்டனில் நகரில் இன்று (23) ஆரம்பமானது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க கிளையான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

” மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ளன, எனினும், அவர்களின் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு, உரிமைகள் தொடர்பில் எந்தவொரு அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறு வலியுறுத்தியே கையெழுத்து திரட்டப்படுகின்றது.” – என்று ஏற்பாட்டுக்குழு அறிவித்தது.

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ், செயலாளர் டி.எம். பிரேமந்திர, உப செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்டோரின் பங்கேற்புடன் கையெழுத்து வேட்டை ஆரம்பமானது.

இதன்போது கருத்து வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் கூறியவை வருமாறு,

”  தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணிப் பிரச்சினை, வீட்டு பிரச்சினை, கல்வி, சுகாதாரப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை.

மாறாக தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவும் கொள்ளையடிக்கப்படுகின்றன.இதற்கு இடமளிக்க முடியாது. மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க எமது சங்கம் முன்னின்று செயற்படும்.” – என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026

    சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

    August 6, 2026

    கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

    August 6, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026
    Editors Picks

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026

    சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

    August 6, 2026

    கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

    August 6, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026

    சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

    August 6, 2026

    கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.