மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.26.08.2023.
நுவரெலியா மாவட்ட சர்வமத அமைப்பு இன்று காலை 10 மணிக்கு அதன் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திருமதி.இரேஷா தலைமையில் ஹட்டன் நகரில் உள்ள கத்தோலிக்க திருச்சபை மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் நான்கு இன மத தலைவர்கள் மற்றும் சர்வமத அமைப்பு குழுவின் உறுப்பினர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மதங்களுக்கு இடையே ஏற்படும் குரோதம் பற்றி கலந்து உரையாடல் இடம் பெற்று அதற்கான தீர்வுகளை எவ்வாறு கொண்டு செல்வது என தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது.
எதிர் காலத்தில் இடம் பெற உள்ள அனைத்து தேர்தல்களில் கடந்த காலங்களை போல் இன ஒற்றுமையை சீரழிக்க ஒரு சில அரசியல் வாதிகள் தற்போது ஆரம்பித்து விட்டனர்.ஒன்றுமே அறியாத மக்கள் முன் இவ்வாறு அரசியல் வாதிகள் பேசுவது நாட்டை சீரலிப்பதுடன் இனங்களுக்கு இடையே பாரிய குரோதம் விரோதம் ஏற்படும் இன படு கொலை ஏற்படும் அபாயமும் உள்ளது ஆகையால் முன் கூட்டியே அதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்க பட்டு நாட்டு மக்களுக்கு இது குறித்து தெளிவூட்டல் மேற் கொள்ள முடிவு செய்ய பட்டது.


