காலவரையின்றி மூடப்பட்டிருந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
அந்த பல்கலைகழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில்; ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த மாதம் 18ம் திகதி முதல் அந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு கல்வி விடுமுறை வழங்கப்பட்டு அடுத்த மாதம் 18 ஆம் திகதி தடைத்தாண்டல் பரீட்சைகள் ஆரம்பமாகும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் தெரிவித்துள்ளார்.
ராமு தனராஜா
