புசல்லாவை சௌலி, இரட்டைப்பாதையை சேர்ந்த க.விபூசணன் நடந்துவரும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் “அவசர மருத்துவ சேவை பிரிவின் மருத்துவ உதவியாளராக” தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய துறையில் பணியாற்றும் முதல் மலையக இளைஞர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதோடு பாடசாலை காலத்தில் இருந்தே இந்த முதலுதவி துறையில் தன்னார்வளராக செயற்பட்ட மாணவர் என்பதோடு சிரேஷ்ட மாணவ தலைவராகவும் இருந்திருக்கின்றார்.
Certis lanka (pvt) limited அவசர மருத்துவ சிகிச்சை தொழினுட்பவியலாளராக பணியாற்றிய இவர் நடந்து முடிந்த LPL போட்டியிலும் மேற்குறிப்பிட்ட பணியை மிக திறமையாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டமையால் வரையறைக்குட்பட்ட தெரிவின் போது ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சீலன்