இடம்பெற்ற விசேட கண் காட்சி!
நண்பன் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமையில் புரொஜெக்ட் A+ எனும் செயற்திட்டத்தினூடாக 21.08.2023 அன்று லெதென்ட்டி தோட்டத்திலும் 25.08.2023 அன்று பாமஸ்டன் தோட்டத்திலும் சிறுவர்களுக்கான சித்திரக்கண்காட்சி நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும், நுவரெலியா புனித திருத்துவ கல்லூரியின் அதிபருமான ரவிச்சந்திரன் சுந்தரராஜ், மற்றும் பணிப்பாளர் திருமதி.கீர்த்தனா தர்ஷன், திட்ட ஒருங்கிணைப்பாளர் டியா ஷெர்லின் ஆகியோர் பங்கேற்றதுடன், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து இவ்வாறான நிகழ்வுகளை நடத்தவும் மலையக மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது என நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.