மஸ்கெலியா நகரில் இயங்கும் மக்கள் வங்கி இலங்கை வங்கி மற்றும் அரச வங்கிகளிலும் அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் 01.09.2023 அன்றும் வழங்கப்பட்டன .இன்றைய தினம் அதிகமான பயனாளிகள் வங்கிகளுக்கு வருகை தந்திருந்தை காணக்கூடியதாக இருந்தது.
அதேவேளை சிலருக்கு மாத்திரமே வங்கியின் ஊடாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது. அதிகமானவர்களுக்கு கொடுப்பனவு பெற்றுக் கொள்வதற்கான தகுதிகள் இருந்தாலும் கொடுப்பனவு பெற்றுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.
சரியான தகவல் மற்றும் வங்கி கணக்கு சரியாக இல்லாதவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர் மேலும் சிலருக்கு அரசாங்கத்தால் கொடுப்பனவு அவர்களுடைய வங்கி கணக்குக்கு வைப்பு செய்யப்பட்டிருந்தாலும் சில சிக்கல் காரணமாக கொடுப்பனவை வங்கியில் இருந்து வழங்க முடியாத சூழ்நிலையும் காணப்பட்டது.
மேலும் மஸ்கெலியா இலங்கை வங்கி கிளை கடந்த 29 ம் திகதி பூட்ட பட்ட நிலையில் காணக்கூடியதாக இருந்தது என பயனாளிகள் கூறினர்.
அரசாங்கம் வங்கி கிளைகளை திறக்க கூறியதால் பயனாளர்கள் காலை 7 மணி முதல் வரிசையில் காத்து நின்று வங்கி கிளை திறக்காததால் வேதனையுடன் திரும்பினர்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்ட வேலையை விட்டு பணத்தை மீள பெற்று கொள்ள மஸ்கெலியா மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி கிளையில் காத்து நிற்கும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்து சென்றனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்