டி சந்ரு
நுவரெலியா மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் மற்றும் அபிவிருத்தி பிரிவினர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட நுவரெலியா மாநகர சபையின் ஊழியர்கள் அனைவருக்கும் ஒருநாள் வைத்திய முகாம் நேற்று காலை 9 மணியளவில் நுவரெலியா மாநகர சபையின் ஆளுநர் மற்றும் உதவி அரசாங்க அதிபரான சுஜிவா போதிமான்ன அவர்களின் தலைமையில்(02/09) நுவரெலியா பொது வைத்தியசாலையில் நடைப்பெற்றது.
இதன் முக்கிய நோக்கமானது நுவரெலியா நகரை அழகு சேர்க்கும் முகமாக பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வரும் குறித்த ஊழியர்களின் நலன் கருதி வைத்திய முகாம் சேவையானது ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த மருத்துவமுகாமில் சரும நோய் மற்றும் வாய் புற்றுநோய் நீரிழிவு உள்ள நோய் இரத்த பரிசோதனைகள் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு இவ் முகாம் நுவரெலியா மாநகர சபையின் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த வைத்திய முகாமில் சுமார் 700க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்து கொண்டதை எங்களுக்கு அவதானிக்க கூடியதாக இருந்தது.