மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.03.09.2023.
கடந்த இரண்டு நாட்களாக மத்திய மலைநாட்டில் மழை பெய்து வருகிறது.
இன்று அதிகாலை முதல் கடும் காற்று கனத்த மழை பெய்து வருவதால் சாமிமலை பிரதான வீதியில் உள்ள மல்லியப்பூ சந்தியில் உள்ள பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்து உள்ளது.
இதனால் அவ்வீதி ஊடாக வாகனங்கள் செல்வது பல மணி நேரம் தடை ஏற்பட்டது.
மல்லியப்பூ தோட்ட மக்கள் இணைந்து அந்த மரத்தின் பாகங்களை அகற்றினர்.
அதன் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.