அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேற்பிரிவில் 15ம் இலக்க லயன் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் கடந்த ஆகஸ்ட் 26ம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பளாகியிருந்தது. இந்நிலையில் அந்த வீட்டில் உள்ள பாடசாலை மாணவியொருவரின் கற்றல் உபகரணங்களும் தீயில் எரிந்துள்ளதால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.
இதனையடுத்து கிளாஸ்கோ த.ம.வியில் தற்போது க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவிக்கு மலையக முன்னேற்ற கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை கழகத்தின் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான கவிஷான் வகுப்பாசிரியர் ஊடாக மாணவிக்கு கையளித்தார்.