மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.04.09.2023.
இன்று 157 வது பொலிஸ் தினத்தையொட்டி இன்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் விஷேட பூசை நிகழ்வு ஒற்றை ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹி ஹம அவர்கள் மேற் கொண்டார்.
நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு இடம் பெற்றது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை 157 வது பொலிஸ் தினத்தையொட்டி ஹட்டன் இஸ்லாமிய பள்ளி வாசலில் சமய நிகழ்வுகள் ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி நிப்புண தெஹி ஹம அவர்களினால் மேற்கொள்ளபட்டது.
இன்று மேலும் ஒரு சமய நிகழ்வு ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் ஹட்டன் வலயத்தின் உயர் அதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகள் பொலிசார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பௌத்த கிறித்தவ ஆலயங்களில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் நுவரெலியாவில் இடம் பெறும் என ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி நிப்புண தெஹி ஹம அவர்கள் தெரிவித்தார்.