மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.04.09.2023.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் நேற்று இரவு வீசிய கடும் காற்றினால் தோட்ட தொழிலாளர்கள் தங்கி இருக்கும் லயின் குடியிருப்பு பகுதியில் கூறை தகடுகள் பறந்தன.
அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த குடியிருப்புகள் உறவினர் இல்லங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இது குறித்து அப் பகுதிக்கு இடர் முகாமைத்துவ குழுவினரோ கிராம உத்தியோகத்தர் சென்று பார்வை இட வில்லை என அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.