மேல்மாகாணம் – கொழும்பு மாநகர் – பம்பலப்பிட்டி அருள்மிகு கதிரேசன் பிள்ளையார் திருக்கோயில்

கொழும்பு மாநகர் தனிலே கோயில் கொண்ட பிள்ளையாரே
குற்றம் களைந்தெம்மை வாழவைப்பாய் பெருமானே
நல்லவரம் தந்தெம்மை வாழவைக்கும் பேரருளே
பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா

ஆறுதலைத் தந்தெம்மை அரவணைக்கும் பிள்ளையாரே
அமைதி தந்து நிம்மதியாய் வாழவைப்பாய் பெருமானே
அறிவு தந்து ஆற்றல் தந்து வாழவைக்கும் பேரருளே
பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா
நம்பித் தொழும் அடியவர்கள் நலன் காக்கும் பிள்ளையாரே
நிம்மதியாய் என்றென்றும் வாழவைப்பாய் பெருமானே
நம்பிக்கை தந்தெம்மை வாழவைக்கும் பேரருளே
பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா
தேடியுன்னை நாடிவரும் அடியவர்க்கு அருள் வழங்கும் பிள்ளையாரே
தொல்லையின்றி நிம்மதியாய் வாழவைப்பாய் பெருமானே
அவதியின்றி ஆறுதலாய் வாழவைக்கும் பேரருளே
பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா
தம்பி கதிரேசன் பெயரையும் உடன் கொண்ட கோயிலுறை பிள்ளையாரே
உன்னடியார் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் வாழவைப்பாய் பெருமானே
மனவுறுதி தந்தெம்மை வாழவைக்கும் பேரருளே
பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா
சித்திகள் வழங்கி யெங்கும் சிறப்பளிக்கும் பிள்ளையாரே
சீர்குன்றா நிலை தந்து வாழவைப்பாய் பெருமானே
சிந்தையிலே உறைந்திருந்து நல்வழியில் வாழவைக்கும் பேரருளே
பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா.
ஆக்கம்-த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
