பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹோமியோபதி மருத்துவ முறையை இந்நாட்டில் பிரபலப்படுத்துவதற்காக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயகொடியின் கருத்திற்கமைய அவ்வமைச்சினால் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ சபையின் முதலாவது ஹோமியோபதி மருத்துவ மாநாடு அண்மையில் (01) கடவத்த இந்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு, ஹோமியோபதி தனியார் மருத்துவ மனைகளுக்கு பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், ஹோமியோபதி மருத்துவர்களின் அறிவு மற்றும் அணுகுமுறையை மேம்படுத்தும் பல செயலமர்வுகள்; மற்றும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மூட்டுவலி, ஆஸ்துமா, சிரங்கு, சிறுநீரக நோய் போன்ற பல நோய்களுக்கு வெற்றிகரமான சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவ முறைக்காக தற்போது நாடு முழுவதும் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
நிறுவப்பட்ட சிகிச்சை மையங்கள் மூலம் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறான விசேட வைத்திய சேவையை முறையாக பேணுவதற்கும், மக்களின் வாழ்க்கை பாதுகாப்பையும், மருத்துவ முறையின் தரத்தை பாதுகாப்பதற்கும் முறையான வைத்திய சபையொன்று ஏற்படுத்த வேண்டும். கடந்த நல்லாட்சியின் போது முடக்கப்பட்ட ஹோமியோபதி வைத்திய சபை, 2020 ஆம் ஆண்டு முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. 05 ½ வருட ஹோமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து பதிவு செய்ய முடியாமல் போன மாணவர்களுக்கு, இலங்கை ஹோமியோபதி வைத்திய சபையில்; பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கின்றது.