கஹவத்தை எல்லஙேவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பாரிய காயங்களுடன் கஹவத்தை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த பாரஊர்தி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி சாரதிக்கு நித்திரை காரணமாக இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை கஹவத்தை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
