கொஸ்லந்த, புனாகலை பிரதேசத்தில் நேற்று (05) இரவு யானை தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர்.
புனாகலை அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய ஆண் ஒருவரே காயமடைந்துள்ளார்.
தந்தையின் வியாபார நிலையத்தை மூடிவிட்டு தந்தையுடன் தனது வீட்டுக்கு செல்லும் போது வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தியத்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளரிடம் வினவியபோது, யானை தாக்கியதில் மாணவனின் கால் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தியத்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை கொஸ்லாந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா