தனது பாடசாலையின் விளைதிறனுக்காக , வினைத்திறன் மிக்க சேவையினை நல்கிய ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபர் திரு ஆர் ஸ்ரீதர் அவர்கள் இன்று அரச பணியி னின்றும் ஓய்வு பெறுகின்றார். 2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இப்பாடசாலை யின் அடைவு மட்டங்களில் உயரிய தரம் எய்தப்படவும், பேணப்படவும் இவரது தலைமைத்துவம் உறுதிமிக்க வகிபங்கை வழங்கியுள்ளது.
மலையகத்தின் முதன்மைப் பாடசாலைக ளில் ஒன்றான ஹட்டன் – ஹைலன்ஸ் கல்லூரியின் கல்விப்பெறுபேற்று வளர்ச்சி, மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி வீதம், இணைப்பாடவிதான செயற்பாடுகளின் முன்னேற்றம், புத்தாக்கத்திறன் விருத்தி, உட்கட்டமைப்பு மேம்படுநிலை, மாணவர்களின் சுய ஆற்றல்களை வெளிப் படுத்தும் வேலைத்திட்டங்கள் போன்றவை இதற்கு முன்னுள்ள காலங்களைக் காட்டிலும் இவரது காலத்திலே வளர்ச்சி பெற்றுள்ளன என்பதை தரவுகள் மூலம் அறிய முடிகின்றது.
பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம், வலுவான பெற்றோர் சந்திப்புக்கூட்டங்கள் என்பவற்றினூடே சமுகத்திற்கும் பாடசாலைக்குமிடையிலான இடைத்தொடர்பினை அதிகரிக்க இவர் மேற்கொண்ட முயற்சிகள் எப்போதும் பாராட்டத்தக்கவை.
இக்கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு எஸ் . விஜயசிங் அவர்கள் ஏற்படுத்திய கனவுப் பார்வையை விசாலப்படுத்தி வீறுகொண்ட பார்வையோடு நிர்வாகப்பயணிப்பை மேற் கொண்டு வெற்றித்தடங்களை பதித்த பெருமை இவருக்குண்டு.
மனிதப்பண்பாளராய், நடுநிலை நிர்வாகி யாய், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற் றோர்களும், சமூகமும் விரும்பும் ஒரு நல்ல தலைவராய் ஹைலன்ஸ் கல்லூரியை வழி நடாத்தி இன்றுடன் ஓய்வு பெறும் ஆளுமை மிக்க அதிபர் திரு ஆர். ஸ்ரீதர் அவர்களது எதிர்காலம் சுபம் பெற கல்லூரி சமூகம் சார்ந்த வாழ்த்துக்கள்.
மூ -அகிலன்