கொழும்பு இரத்தினபுரி பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.
கொழும்பு இரத்தினபுரி பிரதான வீதி எஹலியகொடை தொரன்கொட பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் மகிழுந்து சாரதி காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் இருந்து எஹலியகொடை நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று தனியார் பேரூந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மகிழுந்து சாரதி பாரிய காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை எஹலியகொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.