மாத்தறை -தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் இருவர் சிறந்த பெறுபேறுகளை வெளிவந்துள்ள உயர்தர பரீட்சையில் பெற்றுள்ளனர்.
தெனியாயாவையை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களான சிவகுமாரன் வசந்தா ஆகியோரின் புதல்வி லக்ஷ்மி உயர்தர கலைப்பிரிவில் 3A சித்திகளையும் அங்கிலதில் B சித்தியையும் பெற்று மாவட்டத்தில் 34 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார் .இவர் சாதாரண தரத்தை மாறை /என்சல்வத்த தமிழ் வித்தியாலயத்திலும்,உயர்தரத்தை மாறை/ஹூலந்தாவ தமிழ் மகா வித்தியாலயதிலும் கற்றுள்ளார்.

அதேவேளை தெனியாயவை மற்றுமொரு தோட்டத்தொழிலாளர்களான நிமால்,சந்திராதேவி ஆகியோரின் புதல்வன் நிஷான் மதுஷங்க 2A ,B பெறுபேற்றை பெற்றுள்ளதோடு அங்கிலத்தில் எஸ் தர பெறுபேற்றையும் பெற்றுள்ளார். இவர் சாதாரண தரத்தை மாறை /என்சல்வத்த தமிழ் வித்தியாலயத்திலும்,உயர்தரத்தை மாறை/ஹூலந்தாவ தமிழ் மகா வித்தியாலயதிலும் கற்றுள்ளார்.மாவட்ட ரீதியில் 105 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சமூகத்துக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்த மாணவர்களை மலையகம்.lk பாராட்டுவதோடு, கற்பித்த அதிபர் உட்பட ஆசிரியர்களுக்கும் எல்லா வகையிலும் உதவிய பெற் றோர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
