ம. மா /நு / வட்டகொடை தமிழ் மகா வித்தியாலத்தின் அபிவிருத்தி பணிகளை விருத்தி செய்யும் பொருட்டு 2011ம் ஆண்டு க. பொ. த சாதாரணதர மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வானது இம்மாதம் 10.09.2023 அன்று இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் திறப்பு விழா ம. மா/நு /வட்டகொடை த. ம. வி தொடங்கப்பட்டு தொடர்ந்து இடம்பெறும் பழையமானவர்களுக்கான நட்புரீதியிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி, பெண்களுக்கான வலைப்பந்து போட்டி, மற்றும் பல வினோத விளையாட்டு போட்டிகள் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் இறுதிகட்டமாக போட்டியாளர்கள், ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்கள் போன்றோர்களுக்கான பிரமாண்டமான பரிசளிப்பு விழாவும் இறுதியாக அனைவரையும் உற்சாக படுத்தும் வகையிலான இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் ம. மா/நு வட்டகொடை த. ம. வி ஆர்வலர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தகவல் : வட்டக்கொடை தினேஷ்