இலங்கையின் கோப்பி உலகில் சிறந்த கோப்பி வகைகளுக்கிடையில் முன்னுரிமை பெறுவதாகவும், நாட்டின் கோப்பி உற்பத்தியை பரவலாக்குவது தொடர்பாகவும், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாக நாட்டின் கோப்பியை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதனால் பாரிய அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற சந்திப்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் அல் அமீரி தெரிவித்தார்.
விவசாய அமைச்சில், நாட்டில் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தல் மற்றும் உரம் பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பாக விவசாய அமைச்சருடன் நீண்ட நேரக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
விவசாயப் பிரிவை நவீன மயப்படுத்தல் மற்றும் நாட்டிற்கு விவசாய உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாக ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
நாட்டின் பழவகைகள் மற்றும் மரக்கறிகள் பாரியளவில் தற்போது ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் விசேடமாக நாட்டின் வாழைப்பழம் மற்றும் மாம்பழத்திற்காக வெளிநாட்டு சந்தையில் கேள்வி காணப்படுவதாகவும் அமைச்சர் தூதுவருக்குத் தெளிவுபடுத்தினார்.
தற்போது அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் புளி வாழைப்பழம் டுபாய் மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் வேறு நாடுகளிலிருந்தும் பாரிய கேள்வி காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், வாழைப்பழ வலயங்கள் இரண்டு ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பிலிபிடிய மற்றும் செவனகல ஆகிய பிரதேசங்களை அண்மித்ததாக நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த தூதுவர் இலங்கையின் கோப்பி உலகின் சிறந்த கோப்பி வகைகளுடன் இணைக்க முடியும் என்றும் அரபு நாடுகளில் இலங்கையின் கோப்பி மிகவும் பிரபலமானது என்றும் குறிப்பிட்டார். அவ்வாறே பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாக நாட்டின் கோப்பி வெளிநாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்திகார் இலங்கைக்கு பாரிய வெளநாட்டு செலவணியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் விபரித்தார்.
அவ்வாறே நாட்டிற்கு அவசியமான யூரியா உரம் மற்றும் ஏனைய உரங்களை வழங்குவதற்காக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தூதுவர் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.