எட்டியாந்தோட்டை புனித மரியாளில் இருந்து 13 மாணவர்கள் பல்கலைக்கழகத் தகுதியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.
இதில் ஜெ டிலக்சன், எஸ் .யாழினி மாணவர்கள். 3A சித்திகளை பெற்றதுடன் ஜே .டிலுக்சன் 1.929 எனும் வெட்டுப்புள்ளியுடன் சட்டபீடத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு, கற்பித்த ஆசிரியர்களையும், பங்களிப்பு நல்கியோரையும், உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகளை இலவசமாக நடாத்திய பழைய மாணவர்களுக்கும், கருத்தரங்குகளை நடாத்திய வளவாளர்களுக்கும், எமது பாடசாலையின் முன்னாள் அதிபர் கே .சாந்தகுமார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என அதிபர் என் .சிவக்குமார் தெரிவித்தார்.
(அவிசாவளை நிருபர்)