எட்டியாந்தோட்டடை பூனுகலை தமிழ் மகாவித்தியாலம் உயர்தர பெறுபேறுகளின் படி 13 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி அனைவரும் சித்தி பெற்றதுடன் 10 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும்.
இம்மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இவர்களில் சப்னா என்ற மாணவி சட்டப்பீடத்திற்கு தெரிவாகி இருப்பது மற்றொரு சாதனையாகும்.
இம்மாணவர்களுக்கு இரவு பகல் பாராது கற்பித்து வழிப்படுத்திய பிரதி அதிபர் மற்றும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கும், மேலதிக வகுப்புக்களை நாடத்தி வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் இவர்களுடன் மேலதிக வகுப்புக்களை நடாத்தி வழிப்படுத்திய 2021 வருடம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானா மாணவர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு,
இவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் திரு. ராஜதுரை ஐயா, மற்றும் கைக்கொடுப்போம் அமைப்பு ஜெயபிரகாஷ் மற்றும் செல்வி அண்ணா, சிவகுமார் அண்ணா வன்னிஹோப் ரஞ்சன் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து மகிழ்கின்றேன்.
எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி குறிப்பாக 6 வகுப்பறைகள் தற்காலிக தகர கொட்டகைகளில் இயங்கி வருகின்ற நிலையில் மழை, வெயில் ஆகிய இரு காலங்களிளும் மாணவர்கள் மிகப்பெரிய சவாலாக எதிர்கொண்டு தனது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை மிகவும் ஒரு வேதனையான விடயம்.
இவ்வாறான நிலையில் க. பொ. த (உ/த ) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு 2 வருடங்களில் 23 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 18 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருப்பதும்,
குறிப்பாக அதிலும் 2 மாணவர்கள் சட்டப்பீடத்திற்கு தெரிவாகி இருப்பது என்பதும் ஒரு வரலாற்று சாதனையாகும். எமது பாடசாலையை பொருத்த மட்டில் இது ஒரு பிரசவ வேதனையாகும். கற்றல் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க பொருத்தமான வகுப்பறைகள் அமைப்பதற்கு கல்விக்கு கரம் கொடுக்கும் தனவந்தர்கள் இருப்பின் உளமுவந்து உதவி புரியுமாறு மிகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றே ன். மலையக மக்களின் எழுச்சி கல்வி உயர்ச்சியிலேயே தங்கியுள்ளது.
உங்கள் சேவை மேலும் பல பட்டதாரிகளை உருவாக்கி சமூக எழுச்சிக்கு வலுசேர்க்கும்.
‘ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும்,பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” ( பாரதியார் )
அதிபர்-பூனுகலை தமிழ் மகா வித்தியாலயம்