ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நிலையான ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் ஊவா மாகாண சபையின் சுற்றுலா அமைச்சு மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடன் நிமாணிக்கப்பட்ட பேரகல பிளக்வூட் அங்காடியின் “கடுகேலே கடமண்டிய” ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலினால் நேற்றைய தினம் (12) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊவா மாகாண சுற்றுலா அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன, ஊவா மாகாண உள்ளாட்சி ஆணையாளர் டி.எம்எல்.எச். திஸாநாயக்க, ஹல்துமுல்ல பிரதேச சபையின் செயலாளர் வை.எம்.யு.பி. யாப்பா ஹல்துமுல்ல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்யின் உபதலைவருமின அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
ராமு தனராஜா








