கொழும்பு தேசிய சிசி தமிழ் மகா வித்தியாலயதில் இன்றைய தினம் மாணவர் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது.
பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்கள் ,மாகாண தமிழ் பிரிவிற்கான உதவி கல்வி பணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த பாடசாலை 1883 ஆம் ஆண்டு Church of Ceylon மிஷனரி மூலமாக ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு காலக்கட்டங்களில் சிறிது சிறிதுதாக அபிவிருத்தி அடைந்து தற்போது தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பாடசாலை டேய் பாடசாலையாக ஆரம்பபட்ட காலப்பகுதியில் தோட்டபுரங்களில் உள்ள மாணவர்கள் கல்வி கற்றுவந்தனர் பின்னர் தற்போதைய நிலையில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யூகேஷ்



