மஸ்கெலியா நிருபர்
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் பெய்த கன மழையால் மவுசாகல நீர் தேக்கத்தின் சாமிமலை ஓயாவிலும், காட்மோர் ஓயாவிலும், மரே ஓயாவிலும், சியத்தலகங்குல ஓயாவிலும் கழிவு குப்பைகளும் பிளாஸ்டிக் பொருட்கள் வந்து குவிந்து உள்ளது.
இவற்றை அகற்ற மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மின்சார சபை முன் வர வேண்டும்.
அத்துடன் பெருந்தோட்ட பகுதிகள் மற்றும் நகரங்களை ஊடருத்து வரும் நதிகள், ஓடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை வீச வேண்டாம் என நீர் மின் நிலைய அதிகாரி கூறினார்.
இதனால் நீர் தேக்கங்களில் வாழும் உயிரினங்கள் இறக்கும் நிலை தோன்றியுள்ளது என அவர் கூறினார்.