பசறையில் போதை பொருட்களுடன் நால்வரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் பொலிஸாரால் கைது.
இன்று பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதால் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் பசறை பொலிஸாரினால் பேருந்து தரிப்பு நிலையம் மற்றும் பாடசாலை சுற்றுபுறங்கள் ஆகிய பகுதிகள் சுற்றி வளைத்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகிப்பதாக சந்தேகிக்கப்படும் சில சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்தினர்.
இதில் கஞ்சா போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருந்த
குற்றச்சாட்டில் 19.25.22 வயதுடைய மூவரும் மாவா போதைப்பொருள் வைத்திருந்த 24 வயதுடைய ஒருவரும் பிடிவிறாந்து பிற்ப்பிக்கப்பட்ட ஒருவருமாக ஐவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா