Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026

பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வேவல்ஹின்ன விரியும் சிறகுகள் மகளிர் கரப்பந்தாட்ட அணி தேசிய ரீதியில் 4ஆம் இடம்- பசறை நிருபர்
மலையகம்

வேவல்ஹின்ன விரியும் சிறகுகள் மகளிர் கரப்பந்தாட்ட அணி தேசிய ரீதியில் 4ஆம் இடம்- பசறை நிருபர்

ThanaBy ThanaSeptember 19, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை நிருபர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடந்தோறும் ஏற்பாடு செய்து நடத்தும் தேசிய மட்டக் கரப்பந்தாட்டப் போட்டியில் பதுளை மாவட்டம் சார்பாக மாவட்டப் போட்டியில் கலந்து கொண்ட வேவல்ஹின்ன, விரியும் சிறகுகள் மகளிர் கரப்பந்தாட்ட அணி வரலாற்றில் முதன்முறையாக  தேசிய ரீதியில் 4ஆம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற வெளியக விளையாட்டரங்களில் இடம்பெற்ற இப்போட்டியில்  லீக் போட்டிகளில் பிரபல கண்டி, குருநாகல் மாவட்ட அணிகளை வெற்றிக் கொண்ட விரியும் சிறகுகள் மகளிர் அணி அரையிறுதிப் போட்டியில் கேகாலை மாவட்ட அணியுடன் மோதி 2-1 என்ற சுற்று  அடிப்படையில் தோல்வியை தழுவியது. 3 ஆவது இடத்திற்காக கொழும்பு மாவட்ட அணியுடன் மோதி 2-1  என்ற சுற்று அடிப்படையில் தோல்வியைத் தழுவி தேசிய ரீதியில் 4ஆம் இடத் தைப் பெற்றுக் கொண்டது.
இவ் அணியில்
சிவகுமார் மகேஷ்,
கனநாதன் லசினியா (அணித் தலைவர் ),
பழனிகுமார் ரஞ்சனி,
 தியாகராஜ் நிரோஷா,
ஜெயராமன் திலக்சனா,
முனியாண்டி தனுஷிகா , செல்வன் சிறிசாந்தி, பொறுப்பாசிரியர் ஜி. மொனீசா ஆகியோருடன் பயிற்றுவிப்பாளரும் , வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய அதிபருமான சுந்தரராஜ் ஆகியோரும் காணப்படுகின்றனர். மலையக பெருந்தோட்ட மகளிர் அணியொன்று குறைந்த வளங்களுடன் 25 மாவட்ட அணிகளுடன் போட்டியிட்டு இவ் அடைவை எட்டியிருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.