நு.டெஸ்போர்ட் த.ம.வி வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றது.
இன்றைய சிறுவர்களே நாளைய சிகரங்கள் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றிருந்தது. இதில் இரண்டு கட்சிகள் போட்டியிட பாராளுமன்ற தேர்தல் முறைபடி இடம்பெற்றது.
#சிந்தனை_சிகரங்கள் (SS Party)
#விடியலின்_விண்மீண்கள் (VV Party) ஆகிய இரு கட்சிகள் சார்பில் மாணவர்கள் பலரும் போட்டியிட்டிருந்தனர்.
இதன்படி இத்தேர்தலில் அளிக்கப்பட்ட
மொத்த வாக்குகள்- 248
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -03
செல்லுபடியான வாக்குகள் 245
அதில் அதிகூடிய வாக்குகளை V.V Patty 170 வாக்குகளையும்.
S.S Party 75 வாக்குகளையும் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றிருந்தனர்.
இந் நிகழ்வுக்கு நானுஓயா பொலிஸ் தலைமை அதிகாரி நானுஓயா உப பொலிஸ் தலைமை அதிகாரி கிரிமிட்டிய கிராமநல உத்தியோகத்தர் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
இம்முறையில் விருப்பு வாக்கு அடிப்படையில்
வாக்காளர் அட்டை ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு… மிகச் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் V.V கட்சி வேட்பாளர் P.Priyakumar 71 வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றார்.
இரண்டாம் இடத்தை அதே கட்சியைச் சேர்ந்த N.சதுர்ஷ்ன்068 வாக்குகளையும்
மூன்றாம் இடத்தை E.ரித்திகா 53வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
SS கட்சி சார்பில் அதிகூடய வாக்குகளை மாணவன் S.டில்ஷான் 41 வாக்குகள் பெற்றிருந்தார்.
இதனை ஏற்று வழிநடத்திய மாணவ பாராளுமன் தேர்தல் பொறுப்பாசிரியர். ச.மோகன்ராஜ் மற்றும் சகல ஆசிரியர்கள் இதற்கு எல்லாவிதத்திலும் உதவிய அதிபர் உயர்திரு.S.சிவபாலசுந்தர் உப அதிபர்கள்- திருமதி S.தர்ஷினி மற்றும் திரு.S.தாமோதரம் ஏற்பாட்டு குழுவுக்கும் இந்நேரத்தில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.