மலையக, ஹேவாஹெட்ட பிரதேசத்தில் முல்லோயா தோட்டத்தில் மாணவர்களின் நன்மைகருதி இணைய கல்வி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இணைய கல்வி நிலையதில் தரம் 06 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் பயனடையலாம்.
இதன் மூலம் குறித்த மாணவர்கள் இணையங்கள் மூலம் ,யூடுப் மூலம் நடைபெறும் வகுப்புகளில் பங்குகொள்ளலாம்.
குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் ஆங்கில பாடங்களை கற்றுக்கொள்ள இது வசதியாக மாணவர்களுக்கு இருக்கும் என நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கலாநிதி இரா ரமேஷ் தெரிவித்தார்.
குறித்த இணைய கல்விநிலையமானது மலையகத்தின் நான்காவதாக அமைக்கப்பட்டுள்ளதோடு முழு அனுசரணையும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த கோர்டிஸ் நிறுவனமாகும்.