பசறை, தொலும்புவத்த பகுதியில் புதையல் தோண்டிய போது பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 19ஆம் திகதி பசறை, தொலும்புவத்த 4ஆம் கட்டை. பகுதியில் அமைந்துள்ள விகாரைக்கு அருகில் உள்ள காணியில் புதையல் தோண்டிய போதே சந்தேகநபர்கள் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வெலிமடை, ஒக்கம்பிடிய மற்றும் தொலும்புவத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுடன், பூஜை பொருட்கள், மண்வெட்டிகள், போன்ற பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சம்பவத்துடன் தொடர்புடைய மற்று ஒரு சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும். அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய. தகவலின் அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன ஏகநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு இருந்தனர்
ராமு தனராஜா