நேற்று மாலை பசறை பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக பசறை மடுல்சிமை வீதியில் பசறை பொது மயானத்திற்கு அருகாமையில் பாரிய மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து விழுந்தமையினால் பசறையில் இருந்து மடுல்சிமை பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய வரை செல்லும் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இதனால் அவ்வீதியின் ஊடாக செல்லும் பயணிகளும் பாடசாலை மாணவர்களும் பாரிய அசௌசரியங்களுக்கு உள்ளாகினர்.
இதன்போது உடன் ஸ்தானத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் துரித கதியில் வீதி அதிகார சபை பிரதேச சபையின் ஊடாக மண்ணினை அகழும் பணிகளில் ஈடுபட்டனர். பல மணித்தியாலங்களுக்கு பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
அத்துடன் நேற்று பெய்த மழையின் காரணமாக பசறை பிபிலை வீதியிலும் ஆங்காங்கே கற்களும் மண்மேட்டுகளும் சரிந்து கிடப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
எனவே மழை பெய்யும் வேளைகளில் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
ராமு தனராஜா