எட்டியாந்தோட்டை வெவேத்தலாவ , ஹல்கொல்ல, பூனுகல, பிடகந்த ஆகிய நான்கு தோட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு ஹல்கொல்ல தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றில் ஈடுபட்டனர்.
வெவேத்தலாவ தோட்டத்தில் புதையல் தோன்றுவதற்கு வந்த ஒரு கும்பல் தோட்ட மக்களை அச்சுறுத்தி தொழிலாளி ஒருவரை தாக்கியுள்ளமையே குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு காரணம் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தாக்குதலுக்குள்ளான தொழிலாளி கரவநெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கியவர்களை உடனடியாக செய்யுமாறு வலியுறுத்தி தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலி சாமியார் ஒருவர் தோட்டத்தில் பாரம்பரியமாக வணங்கி வந்த பத்தினி அம்பால் கோயிலை உடைத்து அவ்விடத்தில் தனக்கென சொந்தமான வீடொன்றை அமைத்து பல்வேறு பிரதேசத்தில் இருந்து காடையர்களை கொண்டு வந்து தோட்ட மக்களை தாக்கி வருவதாகவும், 12 கிலோமீட்டர் பாடசாலை மாணவர்கள் நடந்து செல்லும் வழியில் அச்சுறுத்தல் செய்வதாகவும் இதன் காரணமாக தோட்ட மக்கள் பல தடவை தோட்ட நிர்வாகத்துக்கும் மற்றும் போலீசாருக்கு முறைப்பாடு செய்தும் போலீசாரால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் பாரபட்சமாக செயல்படுவதாக தோட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு நேற்றைய தினமும் தோட்டத் தொழிலாளி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும் போலீசாரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து இன்று மக்கள் போலீசாரின் நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ,சந்தேக நபரை கைது கைது செய்யும் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் வாய் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பு அதிகரித்ததை தொடர்ந்து போலீசார் சந்தேக நபரை கைது செய்தனர்.
எனினும் சந்தேக நபரை அவரின் சொகுசு வாகனத்திலையே கொண்டு செல்ல முயன்ற போது மக்கள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
அதனை தொடர்ந்தே குறித்த நபரை போலீசார் அவர் வாகனத்தில் இருந்து இறக்கி போலீஸ் முச்சக்கர வண்டியில் அழைத்து சென்றனர்.
அதவேளை ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தேக நபருடன் சொகுசு வண்டியில் வந்த இளைஞர்கள் தாக்க ஏற்பட முயன்றபோது தோட்ட நிர்வாகம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி மோதலை தடுத்து நிறுத்தினர்.