செ.திவாகரன்
இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக “கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் கோட்டம் ஒன்றுக்குட்பட்ட நானுஓயா கார்ல்பெக் தமிழ் வித்தியாலயத்தில் தரம் – 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. குறித்த மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்ளை நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் டி.சந்ரு பாடசாலையின் அதிபர் கே.கேதீஸ்வரனிடம் வழங்கி வைத்தார்.

இதன் போது பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரமேஷ் அவர்களுக்கும் அமைப்பின் பொருளாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அஜித் குமார் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்ததுடன் மேலும் இவ்வாறான பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இவ் அமைப்பின் ஊடாக மேலதிக உதவிகளை வழங்கவேண்டும் என
ஊடகவியலாளர் டி.சந்ரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.