பலாங்கொடை கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியின் கிரிக்கெட் அணி இம்முறை பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற பாடசாலையின் கிரிக்கெட் அணி, அநுராதபுரத்தில் நடைபெறும் அகில இலங்கை போட்டி தொடருக்கு செல்வது தொடர்பாக கல்லூரியின் அதிபர் அவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைய, அவர் இவ்விடயம் குறித்து கெயார் லங்கா அறக்கட்டளையின் பணிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதனை தொடர்ந்து, 91,400.00ரூபாய் நிதி, உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதி உதவியினைப் பெற்றுத் தந்த CARE LANKA FOUNDATION நிர்வாகத்தினருக்கும், அனுசரணையாளர்களுக்கும் ரூபன் பெருமாள் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் அதிபர் திரு.சண்முகவேல் அவர்கள், பிரதி அதிபர் திரு.குகனேசன் அவர்கள், விளையாட்டு பொறுப்பாசிரியர் திரு. இன்ஷாப் அவர்கள் மற்றும் பலாங்கொடை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிரஞ்சன் குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.