Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சாதாரண தரம் , உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்
இலங்கை

சாதாரண தரம் , உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடர வாய்ப்புகள்

ThanaBy ThanaDecember 23, 2022No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் பேரில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெஹியோவிற்ற படங்கல இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமான LIGHTING DIGITAL தகவல் தொழிநுட்ப பயிற்சி முகாமின் மாணவர்களுடனான சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்….

2023ஆம் ஆண்டு இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும். இதற்காக இளைஞர், யுவதிகளை இந்தத் துறையில் இணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழிநுட்பத் துறையைச் சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். எனவே அந்த இடைவெளியை நிரப்புவது அவசியமானது. க.பொ.த சாதாரண தர அல்லது உயர்தரத்தில் தேர்ச்சியடையாத மாணவர்களை இத்துறைக்குள் உள்வாங்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் இலக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் முழுமையான அறிவைக் கொண்ட நிபுணர்களை உருவாக்குவதன் ஊடாகவே இதனை வெற்றி கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், சாதாரண தரம் அல்லது உயர் தரம் என்பது வெறும் சான்றிதழ் மட்டுமே. ஆனால் அந்தத் தேர்வில் தேர்ச்சியடையாத பெரும்பாலான மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நீங்கள் இந்தப் பரீட்சைகளில் தேர்ச்சியடையவில்லை என்றால், வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை.

இன்று சர்வதேச மட்டத்தில் மென்பொருள் அமைப்புகளை உருவாக்குவதில் இலங்கை மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 50,000 பேர் சுதந்திரமாகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டில்,Free lance களாக பணிபுரியும் நபர்கள் நாட்டிற்கு 140 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளனர். அடுத்த வருடத்திற்குள் இதேபோன்ற இன்னுமொரு குழுவை உருவாக்குவது தொழில்நுட்ப அமைச்சின் மற்றுமொரு இலக்காகும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்ந நிகழ்வுக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் மஞ்சுள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    வத்தளை துப்பாக்கிச் சூடு: தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடம் தீவிர விசாரணை!

    July 25, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.