பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்காபத்தன, பாலாகொல்ல கோணகல பகுதியில் நபர் ஒருவர் பலாக்காய் பறிப்பதற்காக செண்பக மரம் ஒன்றில் ஏறி பலா மரத்திற்கு மாறுகையில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் 44 வயதுடைய ஹல்காபத்தன பாலாகொல்ல கோணகல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் பிரேதம் தற்போது பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா