மஸ்கெலியா விசேட நிருபர்.
அப்கட் டெய்ரி (Upcot Dairy) சாமிமலை பால் பண்ணை உரிமையாளர் T.ஆனந்தகுமார் அனுசரணையில் இன்று காலை (07.10.2023) இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3 இல் உள்ள 31 பாடசாலைகளில்1300 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கி அதனோடு பரீட்சை நிலையங்களில் மாதிரி பரீட்சையும் நடைபெற்றது.
இதற்கு உதவி நல்கிய கோட்டம் 3 இன் அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,ஆசி ரிய ஆலோசகர் B.m.சுதர்ஷினி, வலயக்கல்வி பணிமனையில் ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பாக உள்ள உதவி கல்வி பணிப்பாளர் திரு N. சிவகுமார் மற்றும் இவ் பரீட்சையை ஏற்பாடு செய்து உதவிய அதிபர் திரு K. பிரபானந்தன்( டீ சைட் த.வி) ஆகியோருக்கும் அப்கட் Upcot Dairy உரிமையாளர், அதன் ஊழியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.