மஸ்கெலியா விசேட நிருபர்.
மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் சாமிமலை இஸ்டஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில் ஆறு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (07) இடம்பெற்றுள்ளது.
இது குறித்த தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் இருந்த குளவிகள் களைந்து சென்று குறித்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தோட்ட அம்பியூலன்ஸ் வண்டி மூலம் மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மூன்று பேர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளது டன். கூடுதலாக பாதிக்கப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.