சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாண ஹட்டன் கல்வி வலய சாமிமலை பாரதி தமிழ் வித்தியாலய ஆசிரியர் நலன்புரி சங்கத்தால் ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வானது பாடசாலை அதிபர் எஸ் .வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மமா/ அ/ டிக்கோயா நுண்கலைக் கல்லூரி முதலாம் இடத்தையும், இரண்டாம் இடத்தை கெர்கஸ்வோல்ட் NO 2 பாடசாலையும் , ஆசிரியைகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தை அ/என்பீல்ட் வித்தியாலயமும், இரண்டாம் இடத்தினை மமா/ அ/ பாரதி வித்தியாலமும் பெற்று கொண்டனர் .










