அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில், மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டியில் ப /எல்வட்டன் தமிழ் வித்தியாலய மாணவன் செல்வன். J. கிரிஷாந்தன் முதலாம் பிரிவு ஆக்கம் எழுத்து போட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
மேலும் வலய மட்டப் போட்டிகளில் ஆக்கம் எழுத்து போட்டியில் J. கிரிஷாந்தன் முதலாம் இடத்தையும், வாசிப்பு போட்டியில் R. பிரணவி முதலாம் இடத்தையும், பேச்சு போட்டியில் S. ஜஸ்வின்யா இரண்டாம் இடத்தையும், ஆக்கத்திறன் வெளிப்பாடு போட்டியில் U. இரோஷினி இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தனர்.
அத்தோடு கோட்ட மட்ட போட்டியில் 6 போட்டிகளில் பங்குபற்றி முதலாம் இடங்கள்
இரண்டையும், இரண்டாம் இடங்கள் இரண்டையும், மூன்றாம் இடங்கள் இரண்டயும் இப்பாடசாலை மாணவர்கள் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
குறைந்த வளங்களுடன் 94 வருட வரலாற்றை கொண்ட இப்பாடசாலையில் மாணவனொருவன் வெற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியமை இதுவே முதன் முறையாகும்.
தான் இப் பாடசாலையை
பொறுப்பேற்ற இரண்டு வருட காலத்திற்குள் இவ்வாறான வெற்றிகளை இப்பாடசாலை பெற்றுக்கொண்டமைக்கு தனது மகிழ்ச்சியினை தெரிவித்ததோடு, சாதனைப் படைத்த மாணவர்களையும், ஒத்துழைத்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் பாராட்டி வாழ்த்துவதாக பாடசாலை அதிபர் ஜனாப். A.J.M அஷாட் அவர்கள் தெரிவித்தார்

