உணவு, விஷமான காரணத்தினால் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை, துல்கொல்ல பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் மாணவர்கள் சிகிச்சைக்காக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
