மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.11.10.2023.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் அப்போதைய தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் 40 வீடுகளை கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டு திட்டம் இடை நடுவில் கை விடப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வேலை திட்ட பகுதி பற்றை காடாக மாறிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த குடியிருப்புகள் அதே தோட்டத்தை சேர்ந்த தற்காலிக கொட்டிலில் வசித்து தோட்டத்தில் பணி புரியும் 20 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அதே தோட்டத்தை சேர்ந்த தீ பரவலின் காரணமாக இல்லங்களை இழந்த 20 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கட்டப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
தற்போது இந்த நாற்பது குடும்பம் தற்காலிக கொட்டிலில் பாரிய இன்னல் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
மின் வசதி சுத்தமான குடிநீர் வசதி இல்லை தற்போது இந்த பகுதியில் கனத்த மழை பெய்து வருவதால் தற்காலிக கொட்டிலில் வாசிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
பாடசாலை செல்லும் மாணவர்கள் சொல் என்னா துயர் மத்தியில் தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த 40 வீடுகளை சேர்ந்த மக்கள் கழிவறை வசதிகள் இல்லாத நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இன்னல் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.

